சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!


இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே.

பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல – போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.:

விழுதுகளோடு இணைந்து , வேரொடு ஒன்றாகி இனப்படுகொலை புரிந்தவர்களை போர்க்குற்ற கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம் என்று உலகுக்கு எடுத்துக் கூறுவதே மே 18 போர்க்குற்ற நாளின் இதய தாகம்.
இனி என்ன செய்யப்போகிறோம்?
எங்களின் அடுத்த பயணம் எந்தத் திசை நோக்கியது?எங்களை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி புரிந்த நாடுகளுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக இப்படித் தண்டித்தார்கள்?

ஓற்றையாட்சிக்குள் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது- நோர்வேயில் சுரேஸ் பிரேமச்சந்திரன்!

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப்பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மீள் நல்லிணக்கம் தொடர்பாக வாயளவில் அதிகம் பேசிவரும் தற்போதைய அரசாங்கம், நடைமுறையில் அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்ற இறுதிக்கட்டத்தில்

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுனர் ஐீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். நேற்று பலாலி படைத்தளத்தில் நாட்டை காத்த தேசிய வீரர்களின் நினைவு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

வலி தந்தவனுக்கு வலி கொடுக்க துக்கநாள் ஒருபோதும் உதாவாது

பனங்காட்டான் 

விழுதுகளோடு இணைந்து, வேரொடு ஒன்றாகி இனப்படுகொலை புரிந்தவர்களை போர்க்குற்ற கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம் என்று உலகுக்கு எடுத்துக் கூறுவதே மே 18 போர்க்குற்ற நாளின் இதய தாகம்.
 
இனி என்ன செய்யப்போகிறோம்?

எங்களின் அடுத்த பயணம் எந்தத் திசை நோக்கியது?

புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது – எரிக் சூல்ஹைம்

சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென எரிக் சூல்ஹைம் தெரிவித்துள்ளார். ‘போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம் மற்றும் நோர்வே தமிழர் கற்கை மையம் ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இக்கருத்தரங்கு நோர்வே நாடாளுமன்றத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

நிபந்தனையற்ற விடுதலை குறித்து சரத் பொன்சேகா மகிழ்ச்சி

சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில், தன்னுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்து மூன்று மணி நேரமாக நடத்தியுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் கணவருக்கு நான் தெளிவுபடுத்தினேன். அவர் நிபந்தனையற்ற விடுதலை என்பதால் முழுஅளவில் திருப்தி அடைந்தார். இவ்வாறு அவரது பாரியார் அனோமா தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நா.க.த. அரசும், உ.த.பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சவுக்கு தண்டனை பெற்றுத்தர தமிழ்நாட்டு தலைவர்கள் உறுதி ஏற்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான்று உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

பொன்சேகாவுக்கு மட்டும் விடுதலை! கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரம்

தம்மை விசாரிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு விளக்கமறியல் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். உடல் ஊனமுற்றவர்கள், நோயுற்றவர்கள் உட்பட 190 க்கும் அதிகமான தமிழ் கைதிகள் கொழும்பு சிறைச்சாலையில் இந்த உண்ணாவிரதத்தை வியாழனன்று (மே 17இல்) ஆரம்பித்துள்ளனர்.

புண்ணிய பூமியிலே,.. (அ)(சு)மங்கல தேரரும் (அ)நீதி அமைச்சரும்.

முஹம்மத் எஸ்.ஆர்.நிஸ்தார்:
சமகாலத்தில் இங்கிலாந்தில் நாடுகடத்தல் வழக்கொன்றில் சிக்கி தவிக்கும் இஸ்லாமிய பயங்கரவாதி(?)யாக அறியப்பட்டவர் அபூ கட்டாடா என்ற ஜோர்தானியர். ஜோர்தானிய அரசாங்கத்தால் தேடப்படுபவர், 30 வருங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிப்பவர், அதுவும் இந்நாட்டு வரியிறுப்பாளர் பணத்தில். இங்கிலாந்து அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கும் இடையே இந்த நபரின் “தனிமனித உரிமை” சம்பந்தமாக ஒரு சட்டப் போர். இங்கிலாந்தின் அரச சார்பு வழக்கறிஞர்களும் கடாடாவின் வழக்கறிஞர்களும் இந்த போருக்கான போராளிகள்.

அரசிடமிருந்து உறுதியான செய்தியை தமிழ் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது

பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உறுதியான செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப் பார்க்கின்றது என்பதனை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையின் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

மே 18 – மூன்றாவது ஆண்டு:யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டுள்ள சிறுவர்களைப்பராமரிக்க புலம்பெயர் ஆலயங்கள் பின்னடிக்கின்றன

 லண்டன் குரல்
சிறுவர் இல்லங்கள் கைவிடப்படுகிறது!
தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, பெண்களுக்கு, மக்களுக்கு உதவுகின்றோம்
என்று சொல்லிக்கொள்கின்ற ஆலயங்கள் மிகக்குறைந்த அளவு உதவிகளையே
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றன. அல்லது எந்த உதவிகளையும் வழங்க மறுக்கின்றன.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் எழுத்தறவித்தவன் இறைவன் ஆவான்

சிறிலங்கா மீது குவியும் அனைத்துலக கவனம் – லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன குறித்தும், போருக்குப் பிந்திய நல்லிக்க சூழல் குறித்தும் அனைத்துலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.

மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள போதகர் என்ற வகையிலும், இதயசுத்தியுடன் செயற்படும் மதத் தலைவர் என்ற வகையிலும், வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு தனது மக்களாகிய தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றார்.

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்

மரபு ரீதியான சங்கீதத்தையும் ,நாட்டுபுற இசையையும் தமிழ் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தி வந்தாலும் மெல்லிசை நோக்கிய பயணத்தில் வேற்று இசைகளின் கலப்பின் அவசியத்தையும் உணர்ந்தார்கள்.மேற்கத்தேய கலை வடிவமாக சினிமா அறிமுகமாகியதும் , பின் இசைத்தட்டு கண்டுபிடிப்பின் வளர்ச்சியும் , மேலைத்தேய பொழுது போக்கு இசைத்தட்டுகளின் [ GRAMMOPHONE RECORDS ] வருகையும் ,

இலங்கை அரசின் உளவாளியாக மாறியுள்ள அருன் தம்பிமுத்து !

நேற்றைய தினம் புரொன் லைன் கிளப் நடத்திய இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில்  அருன் தம்பிமுத்து என்பவர் கலந்துகொண்டார். தனது தந்தையையும் தாயையும் புலிகளே சுட்டுக்கொன்றனர் என்ற தொணியில் பேச ஆரம்பித்த இந் நபர், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பணத்துக்காகவே புலம்பெயர்ந்து சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்

புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நோக்கில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை குடிவரவு, குடியகழ்வு மற்றும் பிரஜாவுரிமை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான யோசனைத் திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும், அதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப் படவில்லை – இராணுவம்

யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்வு  ஏற்படுத்தப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.பாதுகாப்புப் படையினர் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கும் வகையில் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நம்பகத்தன்மையில் தமக்கு தொடர்ந்தும் சந்தேகம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில், அரசாங்கத்தின் நம்பகத்தன்மையில் தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. மஹிந்த ராஜக்பசவின் அரச தரப்பினரும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் தலைமையிலான குழுவினருக்குமிடையில் சந்திப்புக்கள் இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுதாக தெரியவந்துள்ளது.

பிரபாகரன் தலைமையில் ராஜீவ்காந்தி தனித்தமிழ் ஈழம் உருவாக்க விரும்பினாராம் !

இலங்கையில் பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமைய இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பியதாக தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலை இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் உரையாற்றிய அவர், “அடுத்து இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு வீரமணி இடத்திலும், சுப.வீரபாண்டியன் இடத்திலும் உரையாடினேன்.

முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளிடையே தேசியவீரர் தின வெற்றிக் கொண்டாட்டங்ளுக்கு முனைப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலங்களை தமிழ் மக்கள் நினைவு கொள்ள தயாராக மறுபுறத்தே தேசியவீரர் தினமெனும் பேரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் அரசு களமிறங்கியுள்ளது.கொழும்பில் அரசினது வெற்றி கொண்டாட்டங்கள் ஒரு புறம் நடக்க மறுபுறம் யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தில் வடக்கிற்கான கொண்டாட்டங்கள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் முழுமையான ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அரச உயர்மட்டத்தை சேர்ந்த சிலர் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளரான பெண்மணியொருவரே முன்னெடுத்து வருகின்றார். 

தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் தீர்மானம்

எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் போராட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானுக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரம்!

கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.லங்கா ருத் என்ற இணையம், இந்த குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான பிரசாரங்கள் இராணுவத்தினரின் உதவியுடன் இடம்பெறுவதாக இணையம் குறிப்பிடடுள்ளது.வாகரைப் பகுதியில் வீடுவீடாக செல்லும் இராணுவத்தினர், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோருகின்றனர்.

மன்னார் ஆயரின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கரிசனை

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராயப்பு ஜோசப் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் இறுதிப் போரின்போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராயப்பு ஜோசப், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் அளித்த சாட்சியம் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது – அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை

தமது மக்களின் பிரச்சினைக்கு எந்தவொரு வெளிநாட்டுத் தீர்வையும் அமெரிக்கா திணிக்கக் கூடாது என்று சிறிலங்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வொசிங்டனில் அனைத்துலக புலமையாளர்களுக்கான வூட்ரோ வில்சன் நிலையத்தில் – கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில்  உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று குவித்தது.

அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த – சரத் பொன்சேகா விடுதலையில் புதிய திருப்பம்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ்  அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.

சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை – பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியார் அரச பொறுப்பேற்று அறுபதாவது ஆண்டு நிறைவானதை முன்னிட்டு, யூன் 2-5 வரையான நான்கு நாட்கள் கொண்டாடப்படவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டால் அரசியலில் ஈடுபடக் கூடாதென நிபந்தனை?

முன்னாள் இராணுவத் தளபதி இந்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பிலான சிறிய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  அலரி மாளிகையில் சந்தித்து, சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசியதாக டிரான் அலஸ் கூறினார்.

இணையத்தளத் தடை தொடர்பான வழக்கை நீதிமன்றம் நிராகரிப்பு

இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் சுனில் ஜயசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கை தொடர்பான செய்தி மற்றும் தகவல்களை வெளியிடும் ஐந்து இணைய ஊடகங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியிருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு என்றும் ஒன்றுதான் – கலைஞர்!

இலங்கை பிரச்சினையில் திமுகவின் அணுகுமுறை மாறியுள்ளதே தவிர அதன் நிலைப்பாடு என்றும் ஒன்றுதான் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று கேட்ட கேள்விக்கு மு.கருணாநிதி அளித்த பதில் பின்வருமாறு:

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் – பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.‏

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு(றறற.வாiயெமமயவாசை.உழஅ – 12.05.2012) தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: கூட்டமைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது பற்றி அடுத்த வாரத்தில் அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார் என்று ஐ. தே.க. வின் பொதுச் செயலாளரும் எம். பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இந்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார்!

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா “இந்த வாரத்தில்’ விடுதலை செய்யப்படுவார் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய நாளேடான தினமணிக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்: கோத்தபாய

இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாள் தோறும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் புலனாகவில்லை.

Powered by WordPress | Designed by: seo services | Thanks to massage bed, web designers and crest whitening strips