தோழர் பத்மநாபாவின் 57வது பிறந்த நாள் நினைவு கூறப்பட்டுள்ளது:

Filed Under (செய்திகள்) by TBC on 20-11-2008


தோழர் பத்மநாபாவின் 57வது பிறந்த நாள் நினைவு கூறப்பட்டுள்ளது:
1951 நவம்பர் 19ம் நாள் காங்கேசன்துறையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் தோழர் பத்மநாபா பிறந்தார். 1972 இல் தோழர்நாபா மற்றும் தம் தோழர்களாலும் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவை சர்வதேச கண்ணோட்டத்துடன் தேசியப்பிரச்சினையை அணுகும் கொள்கை வழியை கடைப்பிடித்தது.
1973 இல் கொழும்பில் பொற்றோருடன் தங்கியிருந்த தோழர்நாபா தென்னிலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு திருமலை யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் பொற்றோர்களுக்கு உதவுவதில் முன்னின்றார். 1974 இல் தமிழாராட்சி மாநாட்டின் பணிகளுக்காக சிவகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்ட தொண்டர் படையில் தோழர்நாபாவும் ஓருவராயிருந்தார். 
1976 ஜுன் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்படடு விடுதலையான சில நாட்களில் தோழர்நாபா கணக்கியல் துறையில் கல்வி கற்பதற்காக அவரது பெற்றோரால் இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆனால் அவர் அங்கு செயற்பட்டுக்கொண்டிருந்த ஈழப்புரட்சி அமைப்பாளர்களுடன் இணைந்து செயற்பட்டதுடன் லெபனான் சென்று ஆயுதப்பயிற்சியை பெற்றார்.
1977 இல் இந்தியா சென்று அஙகிருந்து இலங்கை வந்தார்சூறாவளியால் பாதிக்கப்பட்ட வேளையில் அங்கு தனது தோழர்களுடன் சென்று தொண்டாற்றுவதில் முன்னணியில் இருந்தார்.
1981 இல் நடைபெற்ற அமைப்பாளர் மாநாட்டில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னணி அமைப்புக்களான கிராமிய தொழிலாளர் விவசாயிகள் முன்னணி ஈழமாணவர் பொது மன்றம் ஈழவாலிப முன்னணி ஈழ பெண்கள் விடுதலை முன்னணி போன்ற முன்னணி அமைப்புக்களுக்கும் இராணுவ பிரிவான மக்கள் விடுதலை படைக்கும் தலைமை பொறுப்பை ஏற்றார்.
1984 இல் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 1 வது காங்கிரசில் கட்சியின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார். ஈரோஸ் ரெலோ ஈபிஆர்எல்எவ் ஆகிய இயக்கங்கள் இணைந்த ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற ஐக்கிய முன்னணி உருவாவதற்கு பிரதான பங்கை வகித்தார்.இந்த ஐக்கிய முன்னணியில் 1985 இல் தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்து கொண்டனர்.
1988 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் ஈபிஆர்எல்எவ் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருந்த போதும் முதலமைச்சர் பதவியை தான் ஏற்காது தோழர் வரதராஜப்பெருமாளுக்கு வழங்கியதுடன் தமிழ் சிங்கள இஸலாமிய இனத்தவர்களை கொண்ட ஒரு கூட்டு மந்திரிசபையை அமைக்க இதய சுத்தியோடு செயற்பட்டார்.
1990 ஜுன் 19ம் திகதி தமிழகத்தின் சென்னை மாநகரில் வைத்து தோழர் பத்மநாபர் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
தோழர் பத்மநாபா மக்களை முன்னிறுத்திய, அரசியல் தலைமைத்துவத்தை வலியுறுத்திய தலைவராக திகழ்ந்தார். ,இன்று ஆயுதங்கள் அதிகாரம் செலுத்தும் எமது சமூகத்தில் அன்றாடம் கொலைகளும், ஆட்கடத்தல்களும் நிகழும் சூழ்நிலையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்திய தோழர் பத்மநாபா நினைவுக்கூரப்பட வேண்டியவர். இத்தகைய தலைவர்களை அழித்தே தமிழ் பாசிசம் இன்றைய அவல நிலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை இட்டு வந்திருக்கிறது.
தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் தமிழர்கள், முஸ்லீம்கள் விடுவிக்கப்படுவதையும் இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.
ஆக்கபூர்வமான முறைகளிலேயே அவர் எப்போதும் சிந்தித்தார். மனிதர்களின் சுதந்திரமான நல்வாழ்வு என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஏன தெரிவிக்கபட்டுள்ளது

Make a comment