யாழ். முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பிரதேசங்களில் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை படையினர் கைப்பற்றியுள்ளனர்:
Filed Under (செய்திகள்) by TBC on 20-11-2008

யாழ். முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பிரதேசங்களில் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இங்கு படையினர் நடத்திய பலத்த தாக்குதல் காரணமாக புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவரீதியல் புலிகளின் முக்கிய தளமான முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்குகளைப் பாதுகாக்க புலிகள் நாகர் கோயிலிலிருந்து கிளாலி வரையில் அமைத்திருந்த மண் திட்டுக்களை படையினர் தகர்த்து துவம்சம் செய்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி இப்பிரதேசத்துக்குள் புகுந்த இராணுவத்தின் 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணியினர் புலிகளின் கடுமையான எதிhப்புக்களைச் சமாளித்தே அப்பிரதேசத்தை இன்று கைப்பற்றியுள்ளனர்.
படையினர் மேற்கொண்ட எரிகணைத் தாக்குதலில் புலிகளின் மோட்டார் ஏவும் இரு தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒரு தளம் சேதமாக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
எவ்வாறாக இருந்தாலும் இந்த முன்னகர்வை புலிகள் முறியடித்ததில் படையினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஐம்பது பேர் வரை படைத் தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
